நேர்முகப்பரீட்சை

நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் கீழ் இயங்கிவரும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு புதிய உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு நியமிக்கப்படவுள்ளனர்.

இதன்படி நிந்தவூர் மத்தியஸ்த சபையின் பதவிவறிதாகுகின்ற உறுப்பினர்களுக்குப் பதிலாக மீண்டும் உறுப்பினர்களை நியமிப்பதற்கு மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய ஏற்கனவே விண்ணப்பம் கோரப்பட்டிருந்த போது விண்ணப்பித்திருந்தவர்களுக்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 30 ஆம் திகதி செவ்வாய்க் கிழமை நடைபெறவிருக்கின்றது.

நிந்தவூர் பிரதேச செயலகத்தில் நடைபெறவிருக்கும் இந்த நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளவர்கள், தமது தகமைகளை உறுதிப்படுத்துவதற்கான கல்விச் சான்றிதழ்கள், கிராம சேவகரால் உறுதிப்படுத்தப்பட்ட நல்லொழுக்க சான்றிதழ், சமூக சேவைகள் பற்றிய சான்றிதழ்கள் மற்றும் தேசிய அடையாள அட்டை என்பவற்றுடன் நேர்முகப்பரீட்சைக்கு சமூகமளிக்குமாறு கோரப்பட்டுள்ளனர்.

நேர்முகப்பரீட்சைக்கான அழைப்புக்கடிதங்களை மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் செயலாளர் டி.டீ.என்.டி.கம்முனகே, விண்ணப்பதாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையில், சகல பிரதேச செயலகப் பிரிவிலும் மத்தியஸ்த சபைகள் ஸ்தாபிக்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.

நேர்முகப்பரீட்சை

எ.எல்.எம்.சலீம்

விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்

Home Page - நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை

Apartments - அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments

Resorts - றிசோட்ஸ் வேண்டுமா? Resorts

Villas - விலாஸ் வேண்டுமா? Villas

B & B - B & B வேண்டுமா? B&B

Guest Houses - கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House