
posted 25th November 2021
திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த குறிஞ்சாக்கேணியில் படகுப்பாதை கவிழ்ந்து மாணவர்கள் உட்பட ஆறுபேர் பலியான துயர சம்பவத்தை அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் புதன் (24) அன்று நேரில் சென்று ஆராய்ந்தார்.
இன்று குறித்த பிரதேசத்திற்குச் சென்று அப்பிரதேச மக்களின் துயரில் பங்கு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் படகு கவிழ்ந்ததில் பலியானவர்களின் வீடுகளுக்குச் சென்று தமது அனுதாபங்களையும், துயரையும் வெளிப்படுத்தி ஆறுதலும், தேறுதலும் கூறினார்.
இச்சம்பவத்தினால் பெரும் சோகமயத்தில் ஆழ்ந்துள்ள கிண்ணியா, குறிஞ்சாக்கேணி பிரமுகர்கள் பொது மக்களையும் சந்தித்து அவர்கள் துயரிலும் பங்கு கொண்டனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் அப்துல்லா மஹ்றூப் உட்பட கட்சி முக்கியஸ்தர்களும், நாடாளுமன்ற உறுப்பினரின் வருகையுடன் இணைந்திருந்தனர்

ஏ.எல்.எம்.சலீம்