நாவலர் பெருமானின் உருவச் சிலை நிறுவப்பட்டது

யாழ்ப்பாணம் நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் யாழ். மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட நாவலர் பெருமானின் உருவுருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

கார்த்திகை தீபத் திருநாளான 18 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 10.30 மணியளவில் இறைவணக்கம் செலுத்தப்பட்டு நந்திக்கொடி ஏற்றப்பட்டதுடன் நாவலர் பெருமானின் சிலை திறந்துவைக்கப்பட்டது.

யாழ். மாநகர சபையின் பிரதி மாநகர ஆணையாளர் பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ். மாநகர மேயர் வி.மணிவண்ணன், அகில இலங்கை சைவ மகா சபையின் பொதுச்செயலாளர் பரா.நந்தகுமார் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

பருவ கால மழை நீர் முகாமையும் திருக்கோவில் குளங்களும் எனும் தலைமையில் சர்வராசாவின் சிறப்புரையும் இதன்போது இடம்பெற்றது.

நாவலர் பெருமானின் உருவச் சிலை நிறுவப்பட்டது

எஸ் தில்லைநாதன்