
posted 13th November 2021
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நாகர்கோவில் பகுதியில் பல குடும்பங்கள் வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக கடந்த அரசு ஆட்சி காலத்தில் சஜித் பிரேமதாஸவின் வீட்டுத் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பல வீடுகள் அத்திவாரத்தோடு நிறுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்கள் வசிக்கின்ற தற்காலிக கொட்டில்களை சூழ வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அவர்கள் வீடுகளில் வசிக்க முடியாமல் சமைக்க முடியாமல் குடிதண்ணீர் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த மக்கள் தமக்கு உலர் உணவு நிவாரணம் எதுவும் தேவையில்லை என்றும் தமது வீட்டுத் திட்டத்தை முழுமை அடையச் செய்த உதவி செய்யுமாறு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்
அதேவேளை நாகர்கோவில் கிழக்கில் பல பல வீடுகளை சூழ்ந்து கடுமையான வெள்ளப்பெருக்கு காணப்படுகிறது. அந்த மக்கள் தமக்கு மணல் மண்ணைப் பறித்து அந்த மழை நீர் தேங்காமல் பாதுகாப்புப் பெறுவதற்கு உதவி செய்யுமாறும் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

எஸ் தில்லைநாதன்