நடராஜா ரவிராஜின் நினைவேந்தல்

சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட யாழ் மாவட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் நினைவேந்தல் சாவகச்சேரியில் இன்று முன்னெடுக்கப்பட்டது.

2006 ஆம் ஆண்டு நடராஜா ரவிராஜ் கொழும்பில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

அவர் நினைவாக சாவகச்சேரி நகரில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுருவச் சிலைக்கு சுடரேற்றி மாலை அணிவிக்கப்பட்டு நினைவேந்தல் முன்னெடுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, திருமதி ரவிராஜ், மற்றும்அரசியல் பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

நடராஜா ரவிராஜின் நினைவேந்தல்

எஸ் தில்லைநாதன்