
posted 11th November 2021
தொடர் மழை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 10 ஆயிரத்து 188 குடும்பங்களை சேர்ந்த 33 ஆயிரத்து 823 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
சீரற்ற காலநிலையால் ஒரு வீடு முழுமையாகவும், 76 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு தற்போது 6 இடைத் தங்கல் முகாம்கள் அமைக்கப்பட்டு 96 குடும்பங்களை சேர்ந்த 308 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறியிடத்தக்கது

எஸ் தில்லைநாதன்