
posted 19th November 2021
நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு செங்கோல் இன்று(19) கையளிக்கப்பட்டது.
அண்மையில் குகபாதமடைந்த நல்லூர் கந்தசுவாமி தேவஸ்தானத்தின் 10ஆவது நிர்வாக அதிகாரி குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியாரின் நினைவாக நல்லூர் ஆலயம் மற்றும் யாழ்ப்பாண பண்பாட்டினை பிரதிநிதித்துவப் படுத்தும் முகமாக பிரதிஷ்டை செய்யப்பட்ட செங்கோல் கையளிக்கப்பட்டது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் சிவச்சாரிகளால் யாழ் மாநகர முதல்வர் வி.மணிவண்ணனிடம் நல்லூர் ஆலயத்தில் வைத்து பிற்பகல் 5.30 மணியளவில் சம்பிரதாயபூர்வமாக கையளிக்கப்பட்டது.


எஸ் தில்லைநாதன்