தென்மராட்சியில் டெங்கு பரவும் அபாயம்

தென்மராட்சி பிரதேசங்களில் டெங்கு நுளம்புக் குடம்பிகளின் அடர்த்தி அதிகரித்திருப்பதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில் டெங்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் தரப்பினர் எச்சரித்துள்ளனர்.

இது குறித்து சாவகச்சேரி சுகாதாரப் பிரிவினர் மேலும் தெரிவிக்கையில்;

எதிர்வரும் நாட்களில் டெங்கு காய்ச்சல் நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அண்மைய நாட்களில் மேற்கொள்ளப்பட்ட பூச்சியியல் ஆய்வுகளின் ஊடாக இது கண்டறியப்பட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிராமிய டெங்கு ஒழிப்புக் குழுக்களின் செயற்பாட்டை வலுப்படுத்தவும், பொதுமக்களுக்கு இது தொடர்பில் அறிவுறுத்தவும், நுளம்பு பெருகும் இடங்களை கண்டறிந்து அழிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சகல கிராம மட்ட உத்தியோகத்தர்களிடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, என்றனர்.

தென்மராட்சியில் டெங்கு பரவும் அபாயம்

எஸ் தில்லைநாதன்

விடுமுறைக்கு எந்த வசதி தேவையோ அதற்குரியதைக் கிளிக் செய்யுங்கள்

நீங்கள் உங்களது விடுமுறையைக் கழிப்பதற்கு Home Page என்றால் இதைக் கிளிக் செய்யுங்கள்: விடுமுறை

அப்பாட்மென்ற்ஸ் வேண்டுமா? Appartments

றிசோட்ஸ் வேண்டுமா? Resorts

விலாஸ் வேண்டுமா? Villas

B & B வேண்டுமா? B&B

கெஸ்ட் வீடுகள் வேண்டுமா? Guests House