
posted 4th November 2021
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வடக்கு மாகாணத்திற்குபட்ட அனைத்து தமிழ் பாடசாலைகளுக்கும் நாளை வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணங்களின் ஆளுநர்களினால் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, நாளை வழங்கப்படும் விசேட விடுமுறைக்கு பிறிதொரு விடுமுறை தினத்தில் பாடசாலை நடத்தப்படும் என்று மாகாண கல்வித் திணைக்களங்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை கடந்த, ஒக்டோபர் 25 ஆம் திகதி முதல் அனைத்து பாடசாலைகளிலும், ஆரம்பப் பிரிவுகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீளத் திறக்கப்பட்டன.
இந்நிலையில், எதிர்வரும் 8 ஆம் திகதி முதல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக 10 ஆம் தரத்துக்கு மேற்பட்ட அனைத்து தரங்களுக்கும் திறக்கப்படவுள்ளதாகக் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

எஸ் தில்லைநாதன்