திருவள்ளுவர் மனித வாழ்வுக்கு நல்லதை விட்டுச் சென்றவர். நாம் ஒன்றுபட்டு மன்னாரின் முன்னேற்றத்தை காண்போம். அரசாங்க அதிபர்
திருவள்ளுவர் மனித வாழ்வுக்கு நல்லதை விட்டுச் சென்றவர். நாம் ஒன்றுபட்டு மன்னாரின் முன்னேற்றத்தை காண்போம். அரசாங்க அதிபர்

அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல்

திருவள்ளுவர் மனித வாழ்வுக்காக சிறுவர் தொடக்கம் பெரியோர் வரை தொட்டுச் சென்றவர். இவ்வாறான ஒருவரை மன்னார் மாவட்டத்தில் நினைவுகூர்ந்து விழா எடுப்பது எமக்கு கிடைத்த பாக்கியம். நாம் இனம், மதம் வேறுபாடுகளை களைந்து ஒன்றுபட்டு மன்னார் மாவட்ட அபிவிருத்திக்கு ஒத்துழைப்போம். அத்துடன் மன்னார் மாவட்டத்தில் இதுவரை மாவட்ட கீதம் இல்லாத நிலை தீர்வுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையில் மன்னார் மாவட்ட செயலகமும், மன்னார் மாவட்ட கலை, பண்பாட்டுப் பேரவையும் இணைந்து மன்னார் மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட செயலக சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தனின் ஒருங்கமைப்பில் திருவள்ளுவர் விழா செவ்வாய் கிழமை (16.11.2021) மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

அத்துடன் மன்னார் மாவட்டத்தின் முதல் பெண்மணியாக மன்னார் மாவட்டத்தின் அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் பதவியேற்று ஓராண்டு நிறைவையும் இன்று நினைவு கூறப்பட்டது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் இவ் விழாவுக்கு தலைமைதாங்கி தொடர்ந்து உரையாற்றுகையில்

நான் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக பதவியேற்று இன்று செவ்வாய் கிழமை (16.11.2021) ஒரு வருடம் பூர்த்தியாகின்றது.

இந்த காலத்தில் எனக்கு நல்லாசி வழங்கிய மதத் தலைர்கள், எனது பணியின்போது என்னோடு தோளோடு தோள் நின்று செயல்படும் பதவிநிலை அதிகாரிகள், அனைத்து பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தாகள், எனது மாவட்ட மக்கள் மற்றும் எமது ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் எனது சிரம் தாழ்த்திய நன்றிகள் பல கூறிக்கொள்கின்றேன்.

மாகாண சபையில் நான் ஒரு அதிகாரியாக இருந்தபொழுது இத் திருவள்ளுவர் தினத்தை அங்கு கொண்டாடினோம்.

ஆனால் இன்றைய தினம் (16.11.2021) நாங்கள் எமது மன்னார் மாவட்டத்தில் கொண்டாடுவதற்கு எமக்கு வாய்ப்பு கிடைத்தமை எமக்கு பெருமகிழ்ச்சியும் பெருமிதமும் அடைவோம்.

இத் தினத்தை முன்னிட்டு நாம் கவிதை, பேச்சு, கட்டுரை இவ்வாறு பல போட்டிகளை நடாத்தினோம். இதில் பங்குபற்றிய அரச ஊழியர்கள், மாணவர்கள் இன்னும் பலர் பங்குபற்றியிருந்தனர் இவர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளும் பாராட்டுகளும் உரித்தாட்டும்.

திருவள்ளுவரைப்பற்றி நான் பல புத்தகங்களை படித்தபோது திருவள்ளுவரின் உருவம் எப்படி இருக்கும் என்பது எங்கும் பதிவில் எனக்கு தோன்றவில்லை. இருந்தும் பிரான்சீஸ் வாகிட் என்பவர்தான் திருவள்ளுவர் இப்படித்தான் இருப்பார் என ஒரு உருவத்தை உருவாக்கினார் என கூறப்படுகின்றது.

முதலில் இவரின் உருவம் காவி உடையுடன் நிர்மானிக்கப்பட்டது. பின் 1950 ஆம் ஆண்டு இவரின் உடை வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டது.

திருவள்ளுவருக்கு பல பெயர்கள் சூட்டப்பட்டபொழும் மக்களின் ஒவ்வொரு வாழ்க்கை முறையையும் அவர் கூறியுள்ளார். அதாவது குழந்தைகள் தொடக்கம் பெரியோர் வரைக்கும் அவர் தொட்டுச் சென்றுள்ளார்.

இப்படி நல்வழி காட்டிச் சென்றவருக்கு நாம் விழா எடுப்பது சாலச் சிறந்தது.

எமது மன்னார் மாவட்டத்துக்கு இதுவரை ஒரு மாவட்ட கீதம் இல்லையென இருந்தது. இதை எமது மன்னார் சிரேஷ்ட கலாச்சார உத்தியோகத்தர் எமக்கு சுட்டிக்காட்டி இருந்தார். ஆகவே மாவட்ட கீதம் உருவாக்க எல்லா மக்களினதும் பங்களிப்பு இருக்க வேண்டும் என உணர்ந்து இதில் ஆர்வம் உள்ளவர்கள் தங்கள் பங்களிப்பை வழங்குங்கள் என பொது அறிவித்தல் வழங்கப்பட்டது.

இது மாவட்டம் கடந்து மாகாணம் கடந்து அப்புத்தலை வரைக்கும் சென்று பலர் மன்னார் மாவட்டத்தின் கீதத்தின் ஆக்கத்தை எமக்கு பல வடிவத்திலும் அனுப்பி வைத்திருந்தனர்.

மாவட்டத்தின் அனைத்து விடயங்களும் உள்ளடக்கப்பட்டதாக எவரினதும் ஆக்கங்கள் முழுமயாக இல்லாமையால் முழுமையாக இருக்க வேண்டும் என உணர்ந்து இதற்கான ஒரு குழுவை நியமித்து அனுப்பப்பட்ட அனைத்து ஆக்கங்களும் இசைகளையும் நன்கு பரீசிலித்து அவற்றை தொகுத்து இன்று (16.11.2021) இந்த மாவட்ட கீதம் வெளியிடப்படுகின்றது.

எனது பதவி ஏற்ற முதல் வருட ஞாபகமாக வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் செயல்பட்டவர்களுக்கு நான் நன்றிகூற கடமைபட்டவளாக இருக்கின்றேன்.

தேசிய கீதம் போன்று பலர் இணைந்து இசைப்பதுபோல் எமது மாவட்ட கீதமும் தனி நபர் கீதமாக அமையாது பலர் இணைந்து பாடியுள்ளது ஒரு சிறப்பாகும். இதில் பங்களிப்பு செய்த ஒவ்வொருவருக்கும் நன்றி தெரிவித்து நிற்கின்றேன்.

எமது மாவட்டத்திலே இனம் மதம் வேறுபாடின்றி ஒருவரை ஒருவர் நன்கு புரிந்த கொண்டு நாம் மாவட்ட மக்கள் என நினைத்து ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து புரிந்துணர்வோடும் மகிழ்ச்சியுடனும், நாம் எமது மாவட்டத்தில் மன அமைதியுடன் வாழ்ந்து, மாவட்டத்தின் வளர்ச்சிக்கு ஒன்றிணைவோம் என இந் நிகழ்வின் தலைமை உரையில் தெரிவித்தார்.

திருவள்ளுவர் மனித வாழ்வுக்கு நல்லதை விட்டுச் சென்றவர். நாம் ஒன்றுபட்டு மன்னாரின் முன்னேற்றத்தை காண்போம். அரசாங்க அதிபர்

வாஸ் கூஞ்ஞ