தியாகராஜா நிரோஷ், கபிலன் ஆகியோரை 22.11.2021 நீதிமன்றில் முன்னிலையாகும் படி நீதிமன்றக்  கட்டளை

வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத்தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் உப தவிசாளர் கபிலன் ஆகியோரை திங்கட்கிழமை (22.11.2021) காலை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு மல்லாகம் மாவட்ட நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இந்தக் கட்டளை அச்சுவேலி பொலிஸாரால் தவிசாளர் மற்றும் உப தவிசாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினம் தொடர்பில் நீதிமன்றங்களினால் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில் மாவீரர் தினம் தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டே இந்த அழைப்புக்கட்டளை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

மாவீரர் தினம், தியாகி திலிபன் நினைவு தினம் மற்றும் முள்ளவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகள் வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளரால் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையிலேயே மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளைத் தடுக்கும் நோக்கில் பொலிஸார் நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

தியாகராஜா நிரோஷ், கபிலன் ஆகியோரை 22.11.2021 நீதிமன்றில் முன்னிலையாகும் படி நீதிமன்றக்  கட்டளை

எஸ் தில்லைநாதன்