
posted 15th November 2021
அண்மை காலமாக மன்னார் மாவட்டத்தில் பெய்து வந்த மழையின் காரணமாக இப் பகுதிகளில் அதிகமான தாழ்ந்த பிரதேசங்கள் தொடர்ந்து நீரில் மூழ்கி காணப்படுகின்றது.
தலைமன்னார் பகுதியில் காடுகளில் அதிகமான நீர் சூழ்ந்து காணப்படுவதால் கிராம புறங்களில் வாழும் மக்களின் குடி மனைகளில் இதனால் தொடர்ந்து வெள்ளம் காணப்படுகின்றது.
இதனால் மக்கள் தங்கள் வீடுகளில் தங்கள் இயல்பு வாழ்க்கையை தொடர முடியாது தொடர்ந்து அவல நிலையையே சந்தித்து வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் 14.11.2021 ஞாயிற்றுக் கிழமை தலைமன்னார் பியர் பிரதேச சபை உறுப்பினர் என்.நயீம் மேற்கொண்ட நடவடிக்கையைத் தொடர்ந்து தலைமன்னார் பகுதியில் கிராமத்துக்குள் மற்றும் காடுகளிலுள்ள வெள்ள நீரை மக்களின் உதவிகளுடன் கடலுக்குள் வெளியேற்றுவதை படங்களில் காணலாம்.

வாஸ் கூஞ்ஞ