தமிழ் பேசும் கட்சிகளை ஒன்றாக்கும் முயற்சி - இரா சம்பந்தன்
தமிழ் பேசும் கட்சிகளை ஒன்றாக்கும் முயற்சி - இரா சம்பந்தன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன்

தமிழ் பேசும் கட்சிகளை ஒன்றாக்கும் முயற்சி - இரா சம்பந்தன்

தமிழ் பேசும் கட்சிகளை ஒரு தளத்தில் அணி திரட்டுவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல் தற்போது அமெரிக்கா சென்றுள்ள எம். ஏ. சுமந்திரன் எம். பி. நாடு திரும்பியதும் முன்னெடுக்கப்படும் என்று கூட்டமைப்பின் கடசிகளிடம் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

புதிய அரசமைப்புக்கான வரைவு ஒன்று இந்த ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார். இந்த நிலையில் அதுபற்றி விசேட கரிசனை அவசியம் என்றும் சம்பந்தன் இதன்போது கூறினார்.

முன்னதாக, 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை வலியுறுத்தி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதுவது தொடர்பில் தமிழ் பேசும் கட்சிகள் யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடின. இதில் தமிழ் அரசு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆகியவை பங்கேற்கவில்லை.

எனினும், இந்த சந்திப்பின் பின்னர் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்கள் சம்பந்தனை சந்தித்து பேசியிருந்தன. இந்த நிலையிலேயே தமிழ் பேசும் கட்சிகளை சம்பந்தன் இணைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தமிழ் பேசும் கட்சிகளை ஒன்றாக்கும் முயற்சி - இரா சம்பந்தன்

எஸ் தில்லைநாதன்