
posted 7th November 2021
தங்காலை கதுறுபொகுண ஜயசுந்தர புராதன விகாரையின் புதிய தாதுகோபுரம் திறந்துவைக்கும் நிகழ்வு கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (06) பிற்பகல் இடம்பெற்றது.
சியோமோபாலி வங்ஷ மஹா நிகாயவின் ரோஹண பீடத்தின் காரக சங்க சபிக ஜயசுந்தர புராதன விகாரையின் விகாராதிபதி விதாரன்தெனியே ஞானரதன தேரர் புதிய தாதுகோபுரத்தை திறந்துவைத்தார்.
கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தாதுகோபுரத்தில் முதல் மலர் பூஜை நிகழ்த்தினார்.
குறித்த நிகழ்வில் சியோமோபாலி வங்ஷிக மஹா நிகாயவின் ரோஹண பீடத்தின் அனுநாயக்கர் வணக்கத்திற்குரிய ஓமாரே கஸ்ஸப தேரர்இ சியோமோபாலி வங்ஷிக மஹா நிகாயவின் ரோஹண பீடத்தின் காரக சங்க சபிக ஜயசுந்தர புராதன விகாரையின் விகாராதிபதி விதாரன்தெனியே ஞானரதன தேரர் உள்ளிட்ட வணக்கத்திற்குரிய மஹாசங்கத்தினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
(வாஸ் கூஞ்ஞ)

வாஸ் கூஞ்ஞ