சௌபாக்கியா கடன் திட்டத்தின் ஒரு பகுதி யாழ்ப்பாணத்தில்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் நேற்று யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளுக்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார்.

இலங்கை மத்திய வங்கியின் சௌபாக்கியா கடன் திட்டத்தின் கீழ் பயனடைந்த அச்சுவேலி கைத்தொழில் பேட்டை, வசாவிளான் இயற்கை உர தோட்டம் உள்ளிட்ட சிலவற்றைப் பார்வையிட்டதுடன் பயனாளிகளுடனும் கலந்துரையாடினார்.

இன்று காலை 8 மணிக்கு தனியார் விடுதி ஒன்றில் நடைபெறவுள்ள இலங்கை மத்திய வங்கியின் விசேட கலந்துரையாடலில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணம் வருகை தந்த மத்திய வங்கி ஆளுநரது விஜயம் முக்கியத்துவமானதாகப் பார்க்கப்படுகின்றது.

மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் பொறுப்பேற்ற பின்னர் யாழ்ப்பாணத்துக்கான அவரது முதலாவது விஜயம் இதுவாகும்.

சௌபாக்கியா கடன் திட்டத்தின் ஒரு பகுதி யாழ்ப்பாணத்தில்

எஸ் தில்லைநாதன்