
posted 4th November 2021
வெலிகம − கப்பரதொட்ட-ஆரியவத்த பகுதியிலுள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த வெடிப்பு சம்பவம் இன்று காலை 8:30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த வெடிப்பு சம்பவத்தில் ஹோட்டலின் உரிமையாளர், அவரது மகன் மற்றும் அயலவர் என மூவர் காயமடைந்துள்ளனர்.
வெடிப்புக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
எனினும், எரிவாயு சிலிண்டர் வெடித்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

எஸ் தில்லைநாதன்