சுகாதார பாதுகாப்பு பொருட்கள்
சுகாதார பாதுகாப்பு பொருட்கள்

அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நிந்தவூர் மத்தியஸ்த சபைக்கு நிந்தவூர் பிரதேச செயலகத்தினால் கொவிட் - 19 சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்கென ஒதுக்கீடு கிடைக்கப்பெற்ற 28 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான சுகாதார பாதுகாப்பு பொருட்களே இவ்வாறு வழங்கப்பட்டன.

நிந்தவூர் பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில், பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற இது தொடர்பான நிகழ்வின் போது, பிரதேச செயலக கணக்காளர் எஸ்.எல்.சாஜிதா பர்வீன், குறித்த சுகாதார பாதுகாப்பு பொருட்களை, நிந்தவூர் மத்தியஸ்த சபைத்தவிசாளர் பல்கீஸ் அப்துல் மஜீதிடம் கையளித்தார்.

நிகழ்வின் போது நிருவாக உத்தியோகத்தர் எம்.ரி.எம்.முகம்மட் சரீம், நிதி உதவியாளர் எம்.வை.எம்.நஜீம், மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எப்.பாத்திமா சாமிலா ஆகியோரும் பிரசன்னமாக விருந்தனர்.

இலங்கையில் 3 ஆம் அலை கொவிட் 19 பரவல் காரணமாக இடை நிறுத்தப்பட்டிருந்த மத்தியஸ்த சபைகளின் அமர்வுகள், தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதை அடுத்து மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்,

மத்தியஸ்த சபை உறுப்பினர்கள் மற்றும் வருகை தரும் பிணக்காளிகளின் நலன்கருதி குறித்த சுகாதார பாதுகாப்பு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீதி அமைச்சின் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் இந்த சுகாதார பாதுகாப்பு பொருட்கள் சகல மத்தியஸ்த சபைகளுக்கும் வழங்கப்பட்டு வருகின்றன.

சுகாதார பாதுகாப்பு பொருட்கள்

ஏ.எல்.எம்.சலீம்