
posted 9th November 2021
வடக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பகுதிகளுக்கு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோன்று, வடமேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.

எஸ் தில்லைநாதன்