
posted 26th November 2021
சைவத்திற்கும் தமிழுக்கும் அளப்பெரிய தொண்டாற்றிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் உருவச்சிலை பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தின் நுழைவாயிலில் இன்று 26.11.2021 திறந்து வைக்கப்பட்டது.
கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பின் அனுசரனையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டது. இப்பாடசாலை அதிபர் கணேசலிங்கம் தியாகராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நாவலர் சிலையினை திரை நீக்கம் செய்துவைத்தார்.
இந் நிகழ்வில் கல்முனை தமிழ் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமான க.பிரகலதன் ஆசிரிய ஆலோசகர்களான மா.லக்குணம் க.சாந்தகுமார். கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பின் தலைவர் அ.ரஜிவன் வி.எஸ்.கே வர்த்தக நிலைய உரிமையாளர் வ.கோணேஸ் கல்முனை நெற் ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் பு.கேதீஸ் துரைவநதியமேடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் செல்லையா பேரின்பராஜா ஓய்வு நிலை ஆசிரியை செல்வி க.வசந்தி பாடசாலை நலன்விரும்பி எஸ்.கமலநாதன் ஆகியோர் கௌரவ சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்தனர்.

ஏ.எல்.எம்.சலீம்