
posted 13th November 2021
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சந்தேக நபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதவான் கிருசாந்தன் பொன்னுத்துரை நேற்று வெள்ளிக்கிழமை(12.11.2021) உத்தரவிட்டார்.
பருத்தித்துறை நகர் பகுதியில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை (11.11.2021) அதிகாலை ஆதரவற்று நின்ற 15 வயது சிறுமி ஒருவரை பொலிசார் பொலிஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன்போது அவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக பொலீசாரிடம் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சட்ட வைத்திய அதிகாரியிடம் சிறுமி ஒப்படைக்கப்பட்ட நிலையில் சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் அவர் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸாரினால் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து இரண்டு சந்தேகநபர்களையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

எஸ் தில்லைநாதன்