
posted 26th November 2021

ஐ.நா. சபையிலிருந்து வருகை தந்துள்ள அதன் மத்திய கிழக்கு, ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியங்களுக்குரிய அரசியல் மற்றும் சமாதான விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நாயகம் காலித் ஹையரி, மற்றும் இலங்கைக்கான ஐ.நா. வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் உள்ளிட்ட உயர்மட்ட தூதுக்குழுவினர், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை நேரில் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பு கொழும்பு - ஷங்கரிலா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.
இதன்போது சிறுபான்மைச் சமூகத்தினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் சமகால அரசியல் சூழ்நிலை என்பன குறித்துக் கலந்துரையாடப்பட்டன.

எஸ் தில்லைநாதன்