
posted 13th November 2021
கடந்த இரண்டரை வருடங்களாக மன்னார் மாவட்டத்தில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றி வந்த பண்டுல்ல வீரசிங்க அவர்கள் உயர் பதவி பெற்று கொழும்பு திட்டமிடல் பொலிஸ் பிரிவிற்கு இடமாற்றம் பெற்று செல்கின்றார்.
இவர் மன்னார் மாவட்டத்தில் கடமைபுரிந்த காலத்தில் சகல பொது மக்களுடனும் நல்ல உறவுகளை பேணி பாதுகாத்து வந்ததுடன் கல்வியில் மற்றும் வறுமை கோட்டுக்குள் வாழ்ந்த மாணவர்கள். மற்றும் மக்களுக்கு உதவிகள் பல புரிந்து நல்லதொரு இடத்தை மன்னார் மாவட்டத்தில் பெற்றிருந்தார்.
இவருடைய காலத்தில் மன்னார் மாவட்டத்தில் பெருந் தொகையான போதைப் பொருட்கள் மற்றும் கடத்தல் காரர்களையும் கைது செய்வதில் பொலிசாருக்கு சிறந்த ஒரு வழிகாட்டியாக திகழ்ந்தவர்.
இவரிடம் எவரும் எந்த முறைப்பாடு செய்தாலும் அவற்றுக்கெல்லாம் தீர்வை பெற்றுக் கொடுப்பதில் கவனம் செலுத்தி வந்ததுடன் சிவில் மற்றும் அதிகாரிகளுடன் இணைந்து நல்ல திட்டங்களை முன்னெடுத்து வந்தவர் என பலரும் புகழாரம் சூட்டுவதையும் அறியக்கூடியதாக இருக்கின்றது.
ஞாயிற்றுக் கிழமை (14.11.2021) மன்னாரிலிருந்து புதிய பொறுப்பை ஏற்கச் செல்லும் இவ்வாறான ஒருவர் மன்னார் மாவட்த்திலிருந்து திடீரென இடம்மாற்றம் பெற்று செல்வது பலருக்கும் கவலையை உண்டு பண்ணியுள்ளதாக பலரும் கவலை தெரிவிக்கின்றனர்.

வாஸ் கூஞ்ஞ