கோவிட் தொற்றும் குணமும் மரணமும் அப்டேற் (18.11.2021)

ஆண்கள் 11 பேர் உட்பட மேலும் 14 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (நவ-18) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர்களில் பெண்கள் 3 பேரும் ஆண்கள் 11 பேரும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ண்க்கை 14,086 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் இன்றைய தினம் மேலும் 509 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 554,968 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 14, 971 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 351 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 525,911 ஆக அதிகரித்துள்ளது.

கோவிட் தொற்றும் குணமும் மரணமும் அப்டேற் (18.11.2021)

எஸ் தில்லைநாதன்