
posted 19th November 2021
கொரோனா தொற்றால் யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை சேர்ந்த ஒருவரும், வவுனியாவை சேர்ந்த ஒருவருமாக இருவர் உயிரிழந்தனர்.
யாழ். போதனா மருத்துவமனை ஆய்வுகூடத்தில் 18ஆம் திகதி வியாழக்கிழமை (18.11.2021) நடத்தப்பட்ட பி. சி.ஆர். பரிசோதனையிலேயே இந்த விடயம் வெளிவந்தது. நேற்றைய அறிக்கையின் பிரகாரம்,
பருத்தித்துறை ஆதார மருத்துவமனையால் மாதிரிகள் வழங்கப்பட்ட உயிரிழந்த ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு உயிரிழந்தவர் எம். சிவசுப்பிரமணியம் (வயது 74) என்பவராவார்.
இதேபோன்று, வவுனியாவில் உயிரிழந்த வி. சிசுபாலன் வயது 73 என்பவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தவிர, யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருவர் உட்பட மாவட்டத்தில், 7 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் ஒருவருக்கும், வவுனியா மாவட்டத்தில் மூவருக்குமாக வடக்கு மாகாணத்தில் 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இலங்கையில் மேலும் 518 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 554,240 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 14,608 பேர் சிகிச்சை நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 372 பேர் இன்று குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 525,560 ஆக அதிகரித்துள்ளது.
இலங்கையில் மேலும் 15 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 14,072 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று (18.11.2021) உறுதிப்படுத்தப்பட்ட மரணங்களில் 05 பெண்களும் 10 ஆண்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்