கொரோனா, டெங்கு ஒழிப்பு செயலணியின் கூட்டம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று மற்றும் டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஆராய்வதற்காக மாவட்ட கொரோனா தடுப்பு செயலணியின் கூட்டம் செவ்வாய்க்கிழமை (23.11.2021) இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் காலை 10 மணிக்கு இடம்பெற்றது.

குறித்த செயலணி கூட்டத்தின் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுள்ள நிலைமையில் எடுக்கப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதுடன், மேலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக டெங்கு தொற்று நிலைமை மற்றும் அனர்த்த முகாமைத்துவ விடயங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், 51வது பிரிவின் இராணுவத் தளபதி சந்தன விக்ரமசிங்க, யாழ் போதனா வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர், முப்படை அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி மண்ற தலைவர்கள், சுகாதார அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொரோனா, டெங்கு ஒழிப்பு செயலணியின் கூட்டம்
கொரோனா, டெங்கு ஒழிப்பு செயலணியின் கூட்டம்

எஸ் தில்லைநாதன்