
posted 3rd November 2021

கீரிமலை பகுதியில் கடற்படையினருக்கு காணி அளவிடும் நடவடிக்கை பொதுமக்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களால் இன்று முறியடிக்கப்பட்டது.
காணி உரிமையாளரின் ஒப்புதல் இல்லாமல் கீரிமலை நகுலேஷ்வரம், ஜே/226 கிராம சேவகர் பிரிவில் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டம் ஒன்று நில அளவை திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
இருப்பினும் அங்கு ஒன்றுகூடிய காணி உரிமையாளர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்ப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து, காணி அளவீட்டு நடவடிக்கைகளை தற்காலிகமாக கைவிடுவதாக நில அளவைத் திணைக்களத்தினர் கூறிவிட்டு அவ்விடத்தில் இருந்து அகன்றனர்.

எஸ் தில்லைநாதன்