
posted 17th November 2021

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் நூறு சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நூல் ஒன்றை வெளியிடவிருக்கின்றது.
கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்த, வாழ்கின்ற பிரபலமான எழுத்தாளர்களின் பல காத்திரமான நூல்களைத் தெரிவு செய்து பதிப்பிக்கும் சிறந்த முன்மாதிரித்திட்டத்தின் ஓர் அங்கமாகவே இந்த சிறுகதைகள் தொகுப்பு நூல் வெளிவரவுள்ளது.
“கிழக்கின் 100 சிறுகதைகள்” எனும் பெயரில் வெளியிடப்படவிருக்கும் இந்த சிறுகதைகள் தொகுப்பு நூலில்,
கிழக்கில் இன்றிருந்தால் நூறு வயதைத் தொட்டிருக்கக் கூடிய படைபாளிகள் தொடக்கம் 33 வயது இளைஞர் வரையான முக்கிய படைப்பாளிகளது சிறுகதைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளதாக கிழக்குமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களப்பணிப்பாளர் சரவண முத்து நவநீதன் தெரிவித்தார்.
இந்த “கிழக்கின் 100 சிறுகதைகள்” நூலின் வெளியீடடு நிகழ்வு எதிர்வரும் 20 ஆம் திகதி சனிக்கிழமை திருகோணமலை குளக்கோட்டன் மண்டபத்தில் நடைபெறவிருக்கிறது.
மாகாண பணிப்பாளர் சரவண முத்து நவநீதன் தலைமையில், நடைபெறவிருக்கும் வெளியீட்டு நிகழ்வில்,
கிழக்கு பல்கலைக்கழக திருமலைவளாக முதல்வர் பேராசிரியர் வ.கனக சிங்கம் பிரதம விருந்தினராகவும், கிழக்கு மாகாண பிரதிப்பிரதம செயலாளர் (ஆளணியும், பயிற்சியும்) திருமதி. ஜே.ஜே.முரளீதரன் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொள்வர்.
மேலும் 810 பக்கங்களைக் கொண்டதாக இந்த நூல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஏ.எல்.எம்.சலீம்