கிளிநொச்சியில் பொலிசாருக்குக் காணி.  தடுத்து நிறுத்தினர், பொது மக்கள், அரசியல் வாதிகள்

கிளிநொச்சி நகரத்தில் பொலிஸாருக்கு காணி அளவீடு செய்வதற்கு மக்கள், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் வெளியிட்ட எதிர்ப்பை அடுத்து அந்த அளவீட்டுப் பணிகள் நிறுத்தப்பட்டன.

கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கே/என் 23 கிராம அலுவலர் பிரிவில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணிகள் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இந்த காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் காணி அளவீடு செய்வதற்காக நில அளவையாளர்கள், பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் குறித்த இடத்துக்கு வருகை தந்தனர் .

இதனையடுத்து சம்பவ இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், காணி உரிமையாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலர் கலந்துகொண்டு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

அத்துடன் குறித்த காணி தொடர்பில் கிளிநொச்சி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நடைபெற்று வருவதாகவும் காணி உரிமையாளர்களால் தெரிவிக்கப்பட்டதை அடுத்து காணி அளவீட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டன.

கிளிநொச்சியில் பொலிசாருக்குக் காணி.  தடுத்து நிறுத்தினர், பொது மக்கள், அரசியல் வாதிகள்

எஸ் தில்லைநாதன்