
posted 7th November 2021

நண்பர்களுடன் கிணற்றில் நீந்தச் சென்ற மாணவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் இன்று சுழிபுரம் - திக்கரை பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதில், மூளாயை சேர்ந்த பிரபாகரன் ரஜீவன் (வயது 18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருவதாவது,
உயிரிழந்த மாணவர் பாடசாலையில் சிரமதானம் செய்துவிட்டு நண்பர்களுடன் சேர்ந்து திக்கரையிலுள்ள கிணறு ஒன்றில் நீந்துவதற்காக சென்றிருந்தார்.
கிணற்றில் நீந்திக்கொண்டிருந்த போது திடீரென நீரில் மூழ்கியுள்ளார். நண்பர்கள் அவரை மீட்டு மூளாய் மருத்துவமனையில் உடனடியாக சேர்ப்பித்தனர்.
மூளாய் மருத்துவமனையிலிருந்து அவர் யாழ். போதனா மருத்துமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், இடையிலேயே அவரின் உயிர் பிரிந்துவிட்டது.
அவரின் உடலம் யாழ். போதனா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்