காஸ் கசிவால் வெடிப்புச் சம்பவங்கள்

இலங்கையில் இன்று திங்கட் கிழமை லும் நான்கு இடங்களில் காஸ் கசிவால் ஏற்பட்டதாக நம்பப்படும் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பாதுக்க, ஹன்வெல்ல, ஹட்டன் மற்றும் ஜா-எல ஆகிய பகுதிகளில் இன்று நான்கு வெடிப்புச் சம்பவங்கள் ஏற்பட்டன.

தித்தெனிய பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டிற்கு கொண்டு வந்த எரிவாயு சிலிண்டரில் எரிவாயு அடுப்பு இணைத்த சிறிது நேரத்தில் அடுப்பு வெடித்து சிதறியதாக ஹங்வெல்ல பொலிஸில் இன்று காலை முறைப்பாடு செய்துள்ளார்.

காஸ் சிலிண்டரை நேற்று இரவு காஸ் அடுப்பில் இணைத்ததாகவும், சில நிமிடங்களில் அது வெடிக்கும் சத்தம் கேட்டதாகவும் அவர் கூறினார். நாங்கள் விரைவாக காஸ் சிலிண்டரை அகற்றிவிட்டோம். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அவா் கூறினார்.

இதேவேளை, பாதுக்க - அருக்வத்தையில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு அடுப்புடன் இணைக்கப்பட்ட எரிவாயு குழாய் இன்று வெடித்துள்ளது. எரிவாயு அடுப்பு வேலை செய்யாதபோதே வெடிப்பு ஏற்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார்.

மேலும், ஹட்டனில் மல்லியப்புவ பகுதியில் உள்ள மற்றுமொரு உணவகத்திலும் இதேபோன்ற வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை உணவு சமைத்துக் கொண்டிருந்த போது காஸ் இணைப்புக் குழாய் திடீரென தீப்பிடித்து எரிந்ததாக உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்தார். இந்த விபத்தில் உணவகம் சேதமடைந்தது. இச்சம்பவம் தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, நேற்று இரவு காஸ் கசிவு காரணமாக ஜா-எல துடெல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்றும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எரிந்துகொண்டிருந்த அடுப்பை அணைத்த உடனேயே வெடி விபத்து ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் கூறினர்.

காஸ் கசிவால் வெடிப்புச் சம்பவங்கள்

எஸ் தில்லைநாதன்

For Holiday Bookings click the preferred section

Home Page
Home Page

Apartments Appartments

Resorts
Resorts

Villas
Villas

B & B
B&B

Guest Houses
Guests House