
posted 1st November 2021
விவசாயிகள், கால்நடை வளர்ப்பாளர் எதிர்நோக்கும் இடர்களை தீர்க்குமாறு வலியுறுத்தியும் அரசாங்கத்தின் தடைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை வடக்கு ஆளுநர் அலுவலகம் முன்பாக கண்டப் போராட்டம் ஒன்று நடத்தப்படவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட இணைப்பாளர் பிரபாரகரன் தெரிவித்தார்.
மேலும், யாழ். மாவட்டத்தில் விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். அரசாங்கத்தால் உரி இறக்குமதி நிறுத்தப்பட்டுள்ளதோடு கால்நடைகளுக்கான தீவனம் பெறுவதிலும் இடர்பாடுகள் காணப்படுகின்றன. இதனால், விவசாயிகள் கால்நடை வளர்ப்போர், பண்ணையாளர்கள் பெரும் இடர்களை எதிர்நோக்கி வருகின்றார்கள்
விவசாயிகள் கால்நடை வளர்ப்போர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு நீதி கோரி நாளை செவ்வாய்க்கிழமை வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திற்கு முன்னால் கண்டன போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்.
இதேவேளை, வலி. வடக்கு பகுதியில் நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையால் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் முதல் கட்ட நிதி மட்டுமே பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலதிகமான நிதி வசதிகள் இன்றுவரை மக்களுக்கு வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட அனைவரும் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். போராட்டம் நிறைவடைந்த பின்னர் தேசிய வீடமைப்பு அதிகார சபை அலுவலகத்துக்கு சென்று மனு அளிக்கப்படவுள்ளது. இந்தப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

எஸ் தில்லைநாதன்