
posted 9th November 2021
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தெற்கு அந்தமான் தீவுப்பகுதி அருகே உருவாகியிருந்த காற்று சுழற்சியானது கடல் மட்டத்திலிருந்து 5.4km உயரத்தில் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது.
இது அடுத்து வரும் 24 மணித்தியாலத்தில் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழமுக்க பகுதியாக (Low Pressure Area) வலுவடைந்து, அதன் பின்னர் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் தாழமுக்கமாக (Depression) மேலும் வலுவடைந்து, எதிர்வரும் 11ஆம் திகதி காலை வட தமிழகத்தை அடையும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன் தமிழகத்தின் சென்னை அருகே ஏற்கனவே நீடித்துக் கொண்டிருக்கின்ற காற்றழுத்த தாழ்வு பகுதியுடன் இந்த தாழமுக்கத்துடன் இணைந்து பயணிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் காரணத்தினால் நாளை முதல் ஓரிரு நாட்களுக்கு (11ஆம் திகதி வரை) கிழக்கு மற்றும் வடக்கு மாகாணத்தில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் கிழக்கு மாகாணத்தை விடவும் வடக்கு மாகாணத்திற்கு மழைக்கான சாத்தியம் அதிகமாக காணப்படுகின்றது.
நன்றி.
சிரேஷ்ட வானிலை அதிகாரி க. சூரியகுமாரன்