
posted 25th November 2021

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் 'கிழக்கின் நூறு சிறு கதைகள்' தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் அபூபக்கர் றமீஸ் பிரதம விருந்தினராகவும், கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. லியாகத் அலி, கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் இரா. முரளீஸ்வரன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ. ஜே. அதிசயராஜ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வில் வரவேற்புரை தலைமையுரை என்பவற்றை கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதனும், அறிமுக உரை, தொகுப்புரை என்பவற்றை எழுத்தாளர் சிவ வரதராஜனும், பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வெளியீடுகள் பற்றிய கருத்துரையினை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், முன்னாள் தமிழ்த்துறை தலைவருமான பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ், சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலைப் பதிவாளர் மன்சூர் ஏ. காதர் ஆகியோர் நிகழ்த்துவர். நன்றியுரையினை இத்திணைக்களத்தின் சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் வீ. கோணேஸ்வரன் நிகழ்த்துவார்.

ஏ.எல்.எம்.சலீம்