
posted 1st November 2021
யாழ்ப்பாணம் வடமராட்சி புலோலி பலநோக்கு கூட்டுறவு சங்க எல்லைப் பரப்பிற்குள் வதியும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு 400 கிராம் அங்கர் பால்மா பைக்கெட் 380 ரூபாய்க்கு வழங்கப்படுகின்றது.
கர்ப்பிணித் தாய்மார்கள் தங்களை அடையாளப்படுத்தி கிராமக் கோட்டடியில் உள்ள சங்க தலைமையகத்தில் அங்கர் பால்மா பைக்கற்றை பெற்றுக்கொள்ளுமாறு சங்கத் தலைவர் வி.ஜி தங்கவேல் தெரிவித்துள்ளார்.
தற்போது இப் பால்மா100ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 480 ரூபாயாக பொதுறை வெளியில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது