
posted 10th November 2021
இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிஸ்லாந்தின் தூதுவர் டொமினிக் பார்க்லர் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சோ்ந்த கத்தோலிக்க ஆயர்களை இன்று10 ஆம் திகதி புதன்கிழமை சந்தித்து கலந்துரையாடினர்.
யாழ்ப்பாணம் வந்த சுவிஸ்லாந்து துதுவர் தலைமையிலான குழுவினர் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்தில் வடக்கு கிழக்கு ஆயர்களை சந்தித்தனர்.
சமகால நிலைமைகள் தொடர்பில் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது.
இச்சந்திப்பில் யாழ். ஆயர் வண் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை, மன்னார் ஆயர் வண. இம்மனுவேல் பெர்னாடோ ஆண்டகை, திருகோணமலை ஆயர் வண. நோயல் இம்மனுவேல் ஆண்டகை ஆகியோர் பங்கேற்றனர்.


எஸ் தில்லைநாதன்