கத்தி வெட்டில் இளைஞர் படுகாயம்

யாழ்ப்பாணம் கரவெட்டி கரணவாய் மேற்கு, அந்திரான் பகுதியில் இடம்பெற்ற கத்தி வெட்டுச் சம்பவத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை(12) அதிகாலை இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த தேசிகன் பாலகுமார் (வயது- 23) என்பவரே கத்தி வெட்டுக்கு இலக்காகியுள்ளார்.

நள்ளிரவு அவரின் வீட்டுக்கு தலைக்கவசம் அணிந்து சென்ற மூவர் வீட்டாரை அச்சுறுத்தி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் மீண்டும் அதிகாலை வந்தவர்கள் கதவினை உடைத்து உள் நுழைந்து இளைஞரை வெட்டியதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

கத்தி வெட்டில் இளைஞர் படுகாயம்

எஸ் தில்லைநாதன்