கட்டாக்காலி நாய்கள்

அம்பாறை மாவட்டத்தின் முக்கிய பிரதேசமான நிந்தவூர் பகுதியில் கட்டாக்காலி நாய்களின் பெருக்கம் அதிகரித்துள்ளது.

இதனால் பொது மக்கள் பெரும் அசௌகரியங்களுக்குள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக உள்ளுர் வீதிகளிலும் முக்கிய சிலமையங்களிலும் நாய்கள் பெருகிய நிலை காணப்படுகின்றது.

கட்டாக்காலி நாய்கள் பெருகியுள்ளதால் வீதிகளிலும் சில பொது இடங்களிலும் நடமாடுவதிலும் பொது மக்கள் சிரமங்களை அனுபவிப்பதுடன், வாகனங்களில் குறிப்பாக மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டிகளில் பயணிப்போர் தீடீரென நாய்கள் குறுக்கிடுவதால் விபத்துகளுக்கு உட்பட வேண்டிய நிலையும் ஏற்பட்டு வருகின்றது.

மேலும் நடமாடும் பொதுமக்கள் இந்த கட்டாக்காலி நாய்களின் கடிக்கும் உட்பட வேண்டியுள்ள அச்ச நிலமையிலுமுள்ளனர்.

இக்கட்டாக்கலி நாய்களின் பெருக்கத்தை ஒழிப்பதற்கு சம்பந்தப்பட்டோர் ஆவன செய்ய வேண்டுமெனப் பொது மக்கள் கோருகின்றனர்.

கட்டாக்காலி நாய்கள்

ஏ.எல்.எம்.சலீம்