
posted 9th November 2021
யாழ்ப்பாணத்தில் திங்கட்கிழமை நேற்று இரவு 200 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்துள்ளமையால் மாவட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. இதனால் இன்று மாத்திரம் பாடசாலைகள் மூடப்படுகின்றன.இன்றும் 150 மில்லிமீற்றருக்கும் அதிக மழை வீழ்ச்சி இருப்பதாக வானிலை அவதானிப்பு நிலையம் அறிவித்துள்ளமையால் நிலமை அவதானிக்கப்பட்டு முடிவுகள் மேற்கொள்ளப்படும் என உயர் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன
யாழ்ப்பாணம் இணுவில் மத்திய கல்லூரி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

எஸ் தில்லைநாதன்