கடல் மீன்படி பாதிப்பு

கிழக்கிலங்கையின், அம்பாறை மாவட்ட மக்களின் முக்கிய வருமானம் ஈட்படும் கடல் மீன்படித் தொழில் தற்சமயம் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒருவாரத்திற்கும் மேலாக நிலவிவரும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக, கடற்றொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக தாழமுக்க நிலமை காரணமாக கடற்பிராந்தியங்களில் வீசும் பலத்த காற்று மற்றும் கடல் பெருக்கத்துடனான கொந்தளிப்பு, நீரோட்டம் காரணமாக கடற்றொழில் ஸ்தம்பிதமடைந்துள்ளது.

குறிப்பாக இந்த நிலமையால் கரைவலை மீன்படியாளர்களே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கரைவலை மீன்படிக்கு செல்லமுடியாதவாறு கடலின் நிலமையுள்ளதால் தினமும் இடம்பெற்று வந்த கரைவலை மீன்பிடித்தொழிலில் ஈடுபட முடியாத நிலையில் கடற்றொழிலாளர்கள் தொழிலின்றியும், வருமானமின்றியும் வீடுகளில் முடங்கியிருக்க வேண்டிய அவல நிலையும் ஏற்பட்டுள்ளது.

தமது வலைகளுடன் தோணிகளை மீனவர்கள் கரைக்கு இழுத்து வைத்துள்ள நிலையை அவதானிக்கக் கூடியதாகவுமுள்ளது
வாழ்க்கைச் செலவு நாட்டில் உச்சம் தொட்ட நிலையுள்ள போது தமது நாளாந்த கடற்றொழில் ஸ்தம்பிதமடைந்துள்ளமையால், கடலையே நம்பிவாழும் ஏழை கடற்றொழிலாளர்கள் பெரும் கஷ்டத்திற்கும், அவலத்திற்குமுள்ளாகியுள்ளனர். மீன்பிடி முற்றாக பாதிக்கப்பட்டுள்ளமையால் மீனுக்குப் பெரும் தட்டுப்பாடும், விலையேற்றமும் ஏற்பட்டுள்ளது.

கடல் மீன்படி பாதிப்பு

ஏ.எல்.எம்.சலீம்