
posted 11th November 2021

முன்னாள் அதிபர் இளையதம்பி தயானந்தா
ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியில் மன்னார் சித்திவிநாயகர் இந்து தேசிய பாடசாலையின் முன்னாள் அதிபர் இளையதம்பி தயானந்தா அவர்கள் விஷேட பிரதிநிதியாக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்
மேலும் இந்த செயலணியில் ராமலிங்கம் சக்கரவர்த்தி கருணாகரன்இ மற்றும் யாழ் மாநகர முன்னாள் மேஜர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோரும் தமிழர்கள் என்ற ரீதியில் இவ் நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
ஒரே நாடு - ஒரே சட்டம் என்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கு 3 தமிழ் உறுப்பினர்கள் தெரிவு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வாஸ் கூஞ்ஞ