ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் – 08.11.2021

ஊடக அறிக்கை

நாடளாவிய ரீதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைச் சங்கம் மற்றும் பணிக்கு அமர்த்தப்பட்ட பட்டதாரிகள் சங்கம் ஆகியவற்றால் எதிர்வரும் 08/11/2021 திங்கட்கிழமை பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து முன்னெடுக்கவிருக்கும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு வடக்கு மாகாண அரசாங்க சேவை பட்டதாரி உத்தியோகத்தர்கள் சங்கம் முழு ஆதரவினை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வடக்கு மாகாண அரசாங்க சேவைப் பட்டதாரிகள் சங்கம் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில்;
மத்திய மற்றும் மாகாண அரச சேவையில் பட்டதாரி அலுவலர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அரச சேவையில் இதுவரை கிடைக்காத உரிமைகளையும்,நியாயமான கோரிக்கைகளையும் ஒன்றிணைந்து பெற்றுக்கொள்ளும் நோக்கில்;
(சம்பள முரண்பாடுகளை நீக்குதல்,பொருத்தமான பதவி உயர்வு நடைமுறைகளை (MN-5,MN-7தரத்தில்) வழங்கல், திறமை மற்றும் தராதரத்திற்கு ஏற்றவாறு கடமைகளை வழங்குதல்,அனைத்துப் பட்டதாரி பயிலுனர் அலுவலர்களுக்கும் உடனடியாக நிரந்தர நியமனம் வழங்கல்) போன்ற கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியாக அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் மற்றும் பணிக்கு அமர்த்தப்பட்ட பட்டதாரிகள் சங்கம் ஆகியவற்றால் முன்னெடுக்கவிருக்கும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு வடக்கு மாகாண அரசாங்க பட்டதாரி உத்தியோகத்தர் சங்கமாகிய நாம் எமது முழு ஆதரவினையும் நல்கிக் கொள்கிறோம்.

எதிர்வரும் 08/11/2021 வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு சுகயீன விடுப்புடன் கூடிய ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்திற்கு எமது பேராதரவினை வழங்கிக் கொள்வோம் என ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இதனுடைய மூலப்பிரதியை பார்க்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

சுகயீனவிடுப்பு அறிக்கையுடன் கூடிய ஒருநாள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு

ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் – 08.11.2021

எஸ் தில்லைநாதன்