
posted 17th November 2021
நாட்டில் பெற்றோல் உட்பட எரிபொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படாதென அரசும், துறைசார் அமைச்சும் தெரிவித்துவருகின்ற போதிலும் கடந்த ஓரிரு தினங்களாக, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட கியூ வரிசையில் வாகனங்களும், பொது மக்களும் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
எரிபொருளுக்கு தட்டுப்பாடு என எதிரணியினர் புரளி கிளப்பியுள்ளதாக அரசு கூறுகின்ற போதிலும் மக்களிடையே எரிபொருட்களுக்கு, குறிப்பாக பொற்றோலுக்கு தட்டுப்பாடு ஏற்படும்மென்ற அச்ச உணர்வே மேலோங்கியிருக்கின்றது.
இதனால் தமது வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்பிக் கொள்வதிலும், வாங்கிச் சேமிப்பதிலும் பெரும்பாலானோர் முனைந்துள்ளனர்.
தற்சமயம் தினமும் காலை முதல் மாலைவரை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காணப்படுவதுடன், சில நிலையங்களில் பெற்றோல் முடிந்து விட்டது எனும் அறிவித்தல் போடுமளவுக்கு விற்றுத் தீர்ந்து விடுவதையும் காண முடிகின்றது.
எரிபொருள் தாராளமாகக் கிடைப்பினும் கூட தட்டுப்பாடு ஏற்படுமென மக்கள் நம்புமளவிற்கு நாட்டின் இன்றைய நிலை உள்ளது!

ஏ.எல்.எம்.சலீம்