எச்சரிக்கை!! மன்னாரில் கோவிட் தொற்று அதிகரிக்கின்றது
எச்சரிக்கை!! மன்னாரில் கோவிட் தொற்று அதிகரிக்கின்றது

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன்

மன்னாரில் இந்த மாதம் அதாவது நவம்பர் மாதத் தொடக்கத்திலேயே கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கைகள் வெளிப்படுத்தி வருகின்றது. இதனால் இங்குள்ள இடைநிலை சிகிச்சை நிலையங்கள் மீண்டும் களைகட்ட ஆரம்பித்துள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் த.வினோதன் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் (ஒக்டோபர்) மன்னாரில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி வந்தபோதும் நவம்பர் மாதம் முதல்நாள் தொடக்கம் மன்னார் மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரிக்கத் தொடங்கி வருவதை பணிப்பாளரின் நாளாந்த அறிக்கை வெளிகாட்டி வருகின்றது.

அதாவது இம் மாதம் (நவம்பர்) 1 ந் திகதி 17 பேரும், 2 ந் திகதி 22 நபர்களும், 3 ந் திகதி 14 பேரும் மற்றும் 4 ந் திகதி 8 நபர்களும் இந்த மாதம் மொத்தம் இதுவரை 61 நபர்கள் கொவிற் தொற்றாளர்களாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பனிப்பாளரின் அறிக்கைகள் வெளிகாட்டியுள்ளன.

இதனால் மன்னாரிலுள்ள கொவிட் தொற்றாளர்களின் இடைத்தங்கல் சிகிச்சை முகாம்கள் மீண்டும் களைகட்ட தொடங்கியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பனிப்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அதாவது கடந்த 31.10.2021 அன்று கொவிட் இடைநிலை சிகிச்சை நிலையங்களான நறுவிலிக்குளத்தில் 06 பேரும். தாராபுரம் நிலையம் வெறுமையாகவும் காணப்பட்ட நிலையில் 03.11.2021 அன்று நறுவிலிக்குளம் நிலையத்தில் 21 பேரும், தாராபுரத்தில் 18 நபர்களும் தங்கவைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பயண தடைகள் தளர்த்தப்பட்டு நாடு வழமைக்கு திரும்பியதும் இப் பகுதியிலுள்ள மக்கள் கொவிட் தொற்று தொடர்பாக நிலைநாட்டப்பட்டு வந்த சுகாதார நடைமுறைகளில் தளர்வை ஏற்படுத்தி வருவதைத் தொடர்ந்தே கொவிட் தொற்று மீண்டும் மன்னாரில் தலைதூக்கி வருவதாக த.வினோதன் தெரிவித்தார்.

இந் நவம்பர் மாதத்தில் இதுவரை 105 பி.சீ.ஆர் பரிசோதனைகளும். அன்ரிnஐன் 501 பேருக்கும் எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை கொவிட் முதலாவது தடுப்பூசி 80,850 பேருக்கும், இரண்டாவது தடுப்பூசி 73,978 பேருக்கும், பூஸ்ரர் தடுப்பூசி 260 நபர்களுக்கும் குறிப்பிட்ட வயதுடைய பாடசாலை மாணவர்களுக்கு 4882 பேருக்கும் பாடசாலைக்கு சமூகமளிக்காத குறிப்பிட்ட வயதுடையோருக்கு 523 நபர்களுக்கும் இத் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாக மன்னார் சுகாதார சேவைகள் பணிப்பாளரின் நாளாந்த அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

எச்சரிக்கை!! மன்னாரில் கோவிட் தொற்று அதிகரிக்கின்றது

வாஸ் கூஞ்ஞ