
posted 16th November 2021

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாண நீரிழிவு கழகம் யாழ் போதனா வைத்தியசாலையுடன் இணைந்து செயற்படுத்தும் நீரிழிவுச் சிகிச்சை முகாம் நேற்றுக் காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்.போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இடம்பெறும் நீரிழிவுச் சிகிச்சை முகாமை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் த சத்தியமூர்த்தி மற்றும் மற்றும் நீரிழிவு சிகிச்சை நிலைய வைத்தியர் மகாலிங்கம் அரவிந்தன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
யாழ் நீரிழிவுக் கழகத்தின் தலைவர் தி. மைக்கல், செயலாளர் க. கணபதி மற்றும் நீரிழிவு கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். இந்த நீரிழிவு சிகிச்சை முகாமில் பொதுமக்கள் நீரிழிவுப் பரிசோதனை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

எஸ் தில்லைநாதன்