
posted 25th November 2021
பருத்தித்துறை முதலாம் கட்டை சந்திப் பகுதியில் உள்ள மரக்காலை ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று வியாழக்கிழமை (25) அதிகாலை 2.00 மணியளவில் மீட்க்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் தும்பளை மேற்கு பருத்தித்துறை சேர்ந்த சண்முகராஜா துஷ்யந்தன் (வயது- 21) என்பவராவார்.
சம்பவ இடத்துக்கு சென்ற பருத்தித்துறை மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராசா விசாரணைகளை மேற்கொண்டதுடன்
உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பருத்தித்துறை பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

எஸ் தில்லைநாதன்