இலங்கையில் கோவிட் தொற்றும் மரணமும் அப்டேற் (31.10.2021)

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்ட அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் நேற்றைய தினம் (29) உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,725 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களில் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 07 பேரும், 60 வயதுக்கு மேற்பட்ட 11 பேரும் அடங்குகின்றனர் என அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

30 - 59 வயதுக்கு இடைப்பட்டோரில் 05 ஆண்களும் 02 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்மோரில் 07 ஆண்களும் 05 பெண்களும் அடங்குகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

எஸ் தில்லைநாதன்
வவுனியாவில் கொரோனாப் பரவல் தொடர்ந்தும் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில் மேலும் 31 பேருக்கு இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

வவுனியாவில் உயிரிழந்த வயோதிபர் (முத்துமணியன் கறுப்பையா - வயது 90) ஒருவருக்கு நேற்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. அதேவேளை மேலும் 16 பேருக்கும் நேற்று கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இலங்கையில் மேலும் 388 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,40,369 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 317 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,12,798 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,743 ஆக அதிகரித்துள்ளது.