இலங்கையில் கோவிட் தொற்றும், குணமும், மரணமும் அப்டேற் (02.11.2021)

நாட்டில் மேலும் 74 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி, இன்று இதுவரை 572 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 5,42,211 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 448 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 5,13,540 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,770 ஆக அதிகரித்துள்ளது.


நாட்டில் கொரோனா தொற்றால் நேற்று 10 மரணங்கள் பதிவாகின என்று செவ்வாய்க் கிழமை (02) சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார்.

இவ்வாறு மரணமானவர்களில், 05 ஆண்களும் 05 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இதில் 30 வயதுக்கு உபட்டவர்களில் ஒருவரும், பெண்ணும் 30 முதல் 59 வயதிற்கிடைப்பட்டவர்களில் ஒருவரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் 8 பேருமே இவ்வாறு உயிரழந்தனர்.

இந்த மரணங்களின் எண்ணிக்கையுடன் கொரோனா தொற்றால் நாட்டில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 13 ஆயிரத்து 770ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையில் கோவிட் தொற்றும், குணமும், மரணமும் அப்டேற் (02.11.2021)

எஸ் தில்லைநாதன்