
posted 4th November 2021
இலங்கையில் கொரோனா மரணங்கள் அண்மைய நாட்களில் குறைவடைந்து வந்த நிலையில் திடீரென கொரேனா மரணங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
முதலாம் திகதி கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களது எண்ணிக்கை 10 ஆக பதிவாகியிருந்ததாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரே நாளில் மேலும் 21 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் நேற்று உயிரிழந்தவர்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் இதுவரை கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 13,791 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் 30 - 59 வயதுக்கு இடைப்பட்ட 5 பெண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் 10 பேர் உட்பட 16 பேரும் அடங்குவதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்