
posted 29th November 2021
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் மேலும் இரு சிரேஷ்ட விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாகத் தரமுயர்த்துவதற்கு பல்கலைக்கழகப் பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.
யாழ். பல்கலைக்கழக பேரவையின் மாதாந்த கூட்டம்நேற்றுமுன்தினம் சனிக்கிழமை துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் இடம்பெற்றது.
திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவி உயர்வுக்காக விண்ணப்பித்த சிரேஷ்ட விரிவுரையாளர்களில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் நியமங்களுக்கு அமைய மதிப்பீடுகளையும், நேர்முகத்தேர்வு - தெரிவுக் குழுவின் சிபாரிசுகளையும் பரிசீலனை செய்த பேரவை, மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளரும், நரம்பியல் சிகிச்சை நிபுணருமான மருத்துவர் அஜினி அரசலிங்கம் மருத்துவப் பேராசிரியராகவும், விஞ்ஞான பீடத்தின் விலங்கியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி கணபதி கஜபதி விலங்கியலில் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்படுவதற்குப் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

எஸ் தில்லைநாதன்