
posted 2nd November 2021
வடக்கில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் என்.பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
கடந்த 27 ஆம் திகதி வங்காள விரிகுடாவில் உருவான தாழமுக்கம் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து தற்போது சிலாபத்திற்கு 67 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இந்த தாழமுக்கமானது தற்போது சிலாபத்துக்கு மேற்காக நிலை கொண்டிருப்பதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணம் உட்பட நாட்டின் பல பாகங்களுக்கும் தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு காணப்படுவதாக அவர் கூறினார்.

எஸ் தில்லைநாதன்